வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2017 (10:39 IST)

31வது மனைவியை இந்தியா அனுப்பி, மகளை உடலுறவுக்கு சிறைபிடித்த சவூதி கணவர்!

சவூதியை சேர்ந்த 90 வயது முதியவர், தனது 31 வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை உடலுறவுக்கு சிறைப்பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷபானா சுல்தானா. இவர், சவூதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின்னர் தான், தனது கணவர் ஒரு செக்ஸ் வெறிபிடித்த நபர் என்பது தெரியவந்தது.
 
ஷபானாவுக்கு முன்பாகவே, 30 இளம்பெண்களை திருமணம் செய்துள்ள அந்த நபர். அவருக்கு, தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு பருவ வயது மகளும் உள்ளனர்.
 
இந்நிலையில், அண்மைக் காலமாக, ஷபானாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அதிருப்தி அடைந்த அவரது கணவர், ஷபானாவை, ஐதராபாத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். 
 
ஆனால், ஷபானாவுடன், 2 மகன்களையும் அனுப்பிய அந்த நபர், மகளை மட்டும் அனுப்பி வைக்கவில்லை. இந்நிலையில் தனது மகளை, அவர் செக்ஸ் கொடுமை செய்யலாம் என ஷபானா இதுபற்றி சவூதி அரசு மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் புகார் கூற உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.