வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 19 அக்டோபர் 2019 (16:21 IST)

உடைந்த நீர்தேக்க அணை: 270 சுரங்க ஊழியர்களின் நிலை என்ன?

ரஷ்யாவில் சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை சேமித்த வைத்த அணை உடைந்ததில் 270 ஊரியர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை. 
 
ரஷ்யாவில் உள்ள சைபீரிய பிராந்தியத்திற்கு அருகே இருக்கும் கிராஸ்நோயார்ஸ்க் எனும் பகுதியில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சுரங்கத்தில் இருந்து வெளியேறும் நீரை தனியாக ஒரு அணை கமைத்து சேமித்து வைத்திருந்துள்ளனர். 
 
இந்நிலையில், சம்பவ தினத்தன்று இரவு எதிர்பாராத விதமாக நள்ளிரவு 2 மணிக்கு அந்த நீர்தேக்க அணை உடைந்து சுரங்கத்திற்கு நீர் புகுந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே 12 பேர் மரணமடைந்தனர். 
 
மேலும் அன்று இரவு வேலை செய்து வந்த 270 பேரில் நிலை என்னவென தெரியவில்லை. மீட்பு பணியினர் சுரங்கத்தில் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால், அவர் உயிருடன் உள்ளார்களா? இல்லையா என்பது தெரியவில்லை.