1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2017 (15:41 IST)

எதிரிகளின் கார்களை சேதப்படுத்தும் சைபர் க்ரைம் கிரிமினல்கள்

உலகெங்கிலும் உள்ள சைபர் க்ரைம் குற்றவாளிகளால் இதுவரை பண இழப்பு மட்டுமே ஏற்பட்டு கொண்டிருந்த நிலையில் தற்போது புதுவித க்ரைம்களை ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்களது எதிரிகளின் பொருட்களை சேதப்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.





ரிமோட் கண்ட்ரோலில் கார்க்கதவு திறக்கும் கார்களின் ரிமோட்டை ஹேக் செய்து அதன் மூலம் கார்களை சைபர் க்ரைம் குற்றவாளிகள் விபத்துக்கு உள்ளாக்கி வருவதாகவும், குறிப்பாக தீவிரவாதிகள் இந்த வழிமுறையை அதிகம் கையாண்டு பொதுமக்கள் மற்றும் தலைவர்களுக்கு ஆபத்தை விளைவித்து வருவதாகவும் நியூயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஜஸ்டின் காப்பாஸ் கூறியுள்ளார்.

எனவே 2005ஆம் ஆண்டுக்கு பின்னர் வாங்கப்பட்ட கார்கள் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்