புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 4 டிசம்பர் 2021 (08:43 IST)

ஒமிக்ரானால் 4வது அலை: தென் ஆப்ரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர்!

ஒமிக்ரான் மாறுபாட்டால் தென் ஆப்பிரிக்கா நான்காவது அலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜோ பாஹ்லா தெரிவித்துள்ளார்.

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. ஒமிக்ரான் பரவலை தடுக்க பல நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 
 
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா சுகாதாரத்துறை அமைச்சர் ஜோ பாஹ்லா ஒமிக்ரான் வைரஸ் குறித்து கூறியதாவது, தென் ஆப்பிரிக்கா நாட்டின் உள்ள ஒன்பது மாகாணங்களில் ஏழு  மாகாணங்களில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பல உயிரிழப்புகளை ஏற்படுத்தாமல் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். 
 
தென் ஆப்பிரிக்கர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். தென் ஆப்பிரிக்காவில் நான்காவது அலையாக ஒமிக்ரான் பரவல் உள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்காமலேயே நான்காவது அலையை கட்டுப்படுத்த முடியும். மக்கள் அச்சப்பட வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.