வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (14:56 IST)

கொரோனா வைரஸ் தாக்குதல்! புதிதாக ஆறு அறிகுறிகள்!

கொரோனா வைரஸ் தாக்கபட்ட நபர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிகுறிகளோடு இந்த அறிகுறிகளும் தோன்றலாம் என நோய்கள் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று தற்போது வரை உலகை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்களைக் கொன்றுள்ள இந்த வைரஸ் 29 லட்சம் பேரை பாதித்துள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறியாக முன்னதாக இருமல், காய்ச்சல், மூச்சுத் திணறல் மற்றும் செரிமானக் கோளாறு ஆகியவை அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் அதிர்ச்சியளிக்கும் விதமாக சிலருக்கோ எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே நோய் தாக்குதல் கண்டறியப்பட்டது. இந்நிலையில் இப்போது கூடுதலாக 6 வகை அறிகுறிகளும் இந்த வைரஸ் தாக்குதலால் தென்படலாம் என சொல்லப்படுகிறது.

அறிகுறிகள்
1)கடுமையான குளிர்
2) குளிருடன் உடல் நடுக்கம்
3) தசை வலி
4) தலைவலி
5) தொண்டை வலி
6) சுவை அல்லது வாசனை இழப்பை உணர்வது

இந்த அறிகுறிகள் இருப்பவர்களும் சோதனை செய்துகொள்வது நல்லது என அறிவிக்கப்பட்டுள்ளது.