செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஏப்ரல் 2020 (14:15 IST)

அடங்கவே மாட்டீங்களா நீங்க? – முழு ஊரடங்கிலும் ஊர் சுற்றிய மக்கள்!

தமிழகத்தில் ஐந்து மாநகரட்சிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்கள் விதிகளை மீறி கைதாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்திலும் தளர்வுகள் இன்றி ஊரடங்கு பின்பற்றப்படுகிறது. எனினும் தமிழகத்தின் முக்கியமான மாநகரங்களில் கொரோனா பரவுதல் அதிகரித்துள்ளதால் சேலம். மதுரை, சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் கூட மக்கள் பலர் வெளியே நடமாடி வந்துள்ளனர். முழு ஊரடங்கை மீறியதாக சென்னையில் முதல் நாள் மட்டும் 1199 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தொடரும் நாட்களில் மக்கள் நடமாட்டம் மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படும் நிலையில், மக்கள் நிலைமை உணர்ந்து வீடுகளில் இருக்க சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.