செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 15 நவம்பர் 2020 (12:53 IST)

உலக வரலாற்றில் முதல் முறையாக... திணறடிக்கும் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை!

இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவு. 
 
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு 5,43,11,615 என்றும், உலக நாடுகளின் கொரோ மரணங்கள் எண்ணிக்கை 13,17,396 என்றும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,78,61,884 என்றும் உலக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 
 
இதில் அதிர்ச்சி என்னவெனில் இது வரை இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு புதிய உச்சமாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையாக 6,57,000 பதிவாகி இருப்பதுதான். குறிப்பாக பாதிப்பு எண்ணிக்கை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகம் உள்ளது.