1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 22 ஜனவரி 2025 (08:38 IST)

ஜெர்மனி அதிபர் ஒரு திறமையற்ற முட்டாள்.. ஜனநாயகத்திற்கு எதிரான கொடுங்கோலன்.. எலான் மஸ்க்

உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க், ஜெர்மனி அதிபர் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி அதிபராக இருக்கும் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறார். அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜெர்மனி அதிபர் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் என்பவரை திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறிய போது, ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் இருப்பதால் தான்  கோடீஸ்வரர் முதல் சாதாரண ஆட்கள் வரை விமர்சனம் செய்ய முடிகிறது. யாரும் விரும்பியதை பேசலாம், ஆனால் வலதுசாரிகளை ஆதரித்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும், எனவே அதை ஏற்க முடியாது என்று கூறிய எலான் மஸ்க் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.

Edited by Siva