திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 24 ஜூலை 2022 (16:17 IST)

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பு: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

Stalin Modi
உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இந்தியாவில்  படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் 
 
உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் தங்கள் படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது
 
நேற்று மத்திய அமைச்சர் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர வாய்ப்பு இல்லை என்றும் அதற்கு இந்திய மருத்துவ கழகம் அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறிய நிலையில் முதல்வர் இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
வெளிநாட்டில் படித்த மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர சட்டத்தில் இடம் இல்லை என்று விளக்கமாக மத்திய அரசு தெரிவித்த நிலையில் முதலமைச்சர் அவர் எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது