கொஞ்சம் கூட அணைக்க முடியல; பற்றி எரியும் 20 ஆயிரம் ஏக்கர் காடு!
கலிபொர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பல்வேறு வாழ்விடங்கள் தீக்கிரையாகி உள்ள நிலையில் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் கலிஃபொர்னியா மாகாணத்தின் ரிவர்சைட் கவுண்டி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திடீர் காட்டுத்தீ உருவானது. மிக வேகமாக காட்டுத்தீ பரவி வருவதால் அந்த பகுதியில் உள்ள 8 ஆயிறத்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் 700 ஏக்கர் பரப்பளவில் பரவிய தீ இரண்டே தினங்களில் மளமளவென பரவிய தீ 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு காட்டில் பற்றி எரிந்து வருகிறது. தீயை தடுக்க தீயணைப்பு துறை மற்றும் மீட்பு குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தீயணைப்பு வாகங்கள் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வர இயலாததால் விமானங்கள் மூலம் தீயை கட்டுப்படுத்தும் பொடியை காட்டில் தெளித்து வருகின்றனர்.
ஆப்பிள் ஃபயர் என பெயரிடப்பட்டுள்ள இந்த காட்டு தீயால் மனிதர்கள் யாரும் இறக்கவில்லை என்றாலும், காட்டு உயிரினங்கள் பல அழிந்திருக்கலாம் என கூறப்படுகிறது.