செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (07:22 IST)

100 கோடி ஃபாலோயர்கள்.. கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ சாதனை..!

உலகின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் 900 கோல்கள் அடித்து சாதனை செய்த நிலையில் தற்போது அவர் தனது அனைத்து சமூக வலைதளங்களிலும் சேர்ந்து 100 கோடி ஃபாலோயர்கள் பெற்றுள்ளதாக கூறப்படுவதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கால்பந்து ஜாம்பவான்  கிறிஸ்டியானா ரொனால்டோ சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் மற்றும் யூடியூப் ஆகியவற்றில் மொத்தமாக ஒரு பில்லியன் ஃபாலோயர்கள் அதாவது 100 கோடி ஃபாலோயர்கள் பெற்றுள்ளார் என்பதும் இந்த சாதனையை படைத்த முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் உலகின் மிகப்பெரிய இடத்திற்கு உயர்ந்துள்ளதாக கருதுகிறேன், நான் எப்போதும் எனது குடும்பத்திற்காகவும் உங்களுக்காகவும் தான் விளையாடி உள்ளேன். என்னை நம்பி ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றி’ என ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

900 கோல்கள் அடித்து மாபெரும் வரலாற்று சாதனையை படைத்த கிறிஸ்டியானா ரொனால்டோ தற்போதைய 100 கோடி ஃபாலோயர்கள் பெற்றுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Edited by Siva