ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (18:40 IST)

கடவுளே..என்னிடம் இப்படி விளையாடாதே : பாடகி சின்மயி உருக்கம்

பாடகி சின்மயின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, அவரின் பொருட்கள் கொள்ளை போன சம்பவம் நடைபெற்றுள்ளது.


 

 
பாடகி சின்மயி தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். அங்கு நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுவதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். 
 
இந்நிலையில், ஒரு இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டு, அதிலிருந்து பொருட்களை யாரோ திருடி சென்றுவிட்டனர். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சின்மயி “என் கார் கண்ணாடியை உடைத்து அதிலிருந்த அனைத்து பொருட்களையும் திருடி சென்று விட்டார்கள். உடைந்த போன கண்ணாடிக்கு அருகில் தற்போது நின்று கொண்டிருக்கிறேன்” என ஒரு டிவிட்டில் பதிவு செய்துள்ளார்.
 
அடுத்த டிவிட்டில் “என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ளவே எனக்கு 5 நிமிடம் ஆனது. இதுபோல் நடப்பது இங்கு சாதாரணமான ஒன்று என போலீசார் கூறுகிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
 
மற்றொரு டிவிட்டில் “என்னுடைய பொருட்கள் எனக்கு திரும்ப கிடைக்கும் என நம்புகிறேன். இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. கடவுளே என்னுடன் இப்படி விளையாடாதே” என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில், அங்கிருந்த சிசிடிவி கேமராவில், திருட்டில் ஈடுபட்ட நபரின் முகம் பதிவாகியுள்ளதாகவும், அதன் மூலம் விரைவில் போலீசார் அவரின் பொருளை மீட்டுத் தருவார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது.