Daily Horoscope
✕

இந்தியா துப்பாக்கி ஏந்தட்டும்.. பகிரங்க எச்சரிக்கை விடுத்த சீனா!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 28 செப்டம்பர் 2020 (13:39 IST)
இந்தியா தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து சீனா செய்தி வெளியிட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே லடாக் எல்லையில் இந்தியா - சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் போர் பதற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சீனா எல்லையில் ஊடுருவதால் பேச்சுவார்த்தைகள் பலனற்று போய்விடுகின்றன.  
 
எனவே, இந்தியா சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளை குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 
 
இந்நிலையில் அதிகாரப்பூர்வ நாளிதழான குளோபல் டைம்ஸ், இந்தியத் தரப்பில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டால், அந்நாடு தாங்க முடியாத விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து செய்தி வெளியிட்டுள்ளது.
 
சீன ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடக்க இந்தியா அனுமதித்தால், அது இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் இது இந்தியாவுக்கும் ஆபத்தாக முடியும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

AI அம்சத்துடன் இந்திய நிறுவனமான லாவா விராட் கர்வ்: ரூ. 25,000-க்குள் ஒரு பிரீமியம் ஸ்மார்ட்போன்!

ரோட்டில் தர்ணா செய்த பிரியங்கா காந்தி.. தரதர என இழுத்து சென்ற டெல்லி போலீஸ்..

தனுஷ், சிவகார்த்திகேயன் அரசியலுக்கு வராங்களே!.. வைகோ ரியாக்‌ஷன் இதுதான்!..

ரீசார்ஜ் தொகையை உயர்த்திய ஏர்டெல்!.. பயனாளர்கள் ஷாக்

பேரணி நடந்தபோது அசைவம் சாப்பிட்டாரா ராகுல் காந்தி.. பாஜக கிளப்பிய புது சர்ச்சை...

அடுத்த கட்டுரையில்
Show comments