1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:25 IST)

அடங்காத சீனா.. எல்லையில் ஆள் பலத்தை அதிகரிக்கும் இந்தியா!!

சீனா தனது ஊடுருவலை நிறுத்தாத காரணத்தால் இந்தியா எல்லையில் வீரர்கள் படையை அதிகரித்துள்ளது. 

 
கடந்த சில மாதங்களாகவே லடாக் எல்லையில் இந்தியா - சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது. இதனால் போர் பதற்ற சூழ்நிலை உருவாகி உள்ளது. பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் சீனா எல்லையில் ஊடுருவதால் பேச்சுவார்த்தைகள் பலனற்று போய்விடுகின்றன. 
 
இந்நிலையில், இந்தியா சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளை குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, எந்த சூழ்நிலையையும் சமாளிக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.