சீனாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியாவுக்கு அச்சுறுத்தல்??
சீனாவின் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை DF-17 கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணை ஆகும். இது அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறனுடையது. இந்நிலையில் இது இந்தியாவிற்கு அச்சுறுத்தலாகுமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹைபர்சோனிக் ஏவுகணை, கண்டங்களுக்கு இடையே பாய்ந்து தாக்கும் அதிவேக ஏவுகணையான பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் க்ரூஸ் ஏவுகணையின் திறன்கள் இணைந்த ஒன்றாகும். 3000 முதல் 7000 கிலோமீட்டர் தொலைவுவரை பயணிக்கக்கூடியது.
மேலும், பூமியின் வளிமண்டலத்திலிருந்து வெளியேறும் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை, பூமியின் பரவளைய பாதையில் சென்று மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்கு திரும்பி வருமாம். சீனாவின் 12,000 கிமீ தொலைவுவரை தாக்கும் திறன் கொண்ட DF-17 ஏவுகணை அமெரிக்காவின் எந்தவொரு பகுதியையும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றடைந்துவிடும்.
இந்த ஏவுகணையின் வரம்பிற்குள் அமெரிக்கா இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்தியாவும் அதன் வரம்பிற்குள் இருக்கும் சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது.