சோதனை மேல் சோதனை: சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
சீனாவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக சீனாவை உலுக்கி வந்த கொரோனா வைரஸ் தற்போது மெல்ல கட்டுப்பாட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. கடந்த மாதங்களில் பெரும் உயிர்பலிகளையும், பொருளாதார இழப்புகளையும் கண்ட சீனா மெல்ல எழுந்து வரும் நிலையில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 5.6 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள 80 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 500க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனால் 4000 பேர் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகாத நிலையில், தொடர்ந்து சீனா சோதனைக்கு உள்ளாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது