புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 26 ஜனவரி 2019 (14:26 IST)

டேட்டிங் செல்ல இளம்பெண்களுக்கு விடுமுறை: சீன அரசு அதிரடி

பிரசவ விடுமுறை உள்பட பல விடுமுறைகள் பெண்களுக்கு பல நாட்டு அரசுகள் அளித்துள்ளது என்பது தெரிந்ததே. ஆனால் உலகில் முதல்முறையாக சீன அரசு டேட்டிங் செல்ல பெண்களுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளது.
 
சீனாவில் 25 முதல் 30 வயதான பெண்கள் பலர் திருமணம் செய்யாமல் இருப்பதாக சமீபத்திய ஆய்வு தெரிவித்தது. திருமணம் மீது விருப்பம் இல்லாமலும், திருமணத்தின் மீது வெறுப்பு உள்ள இதுபோன்ற பெண்கள் திருமணம் செய்ய ஊக்கப்படுத்தும் வகையில் இரண்டு சீன அரசு நிறுவனங்கள் 25 வயதுக்கு மேல் இருக்கும் திருமணம் ஆகாத பெண்களுக்கு ஒரு வாரம் டேட்டிங் விடுமுறை அளிக்கின்றது. இந்த ஒருவாரத்தில் அந்த பெண்கள் தங்களுக்கு பிடித்த காதலனை தேடி திருமணம் செய்து கொண்டால் மேலும் ஒருவாரம் திருமண விடுமுறையும் கிடைக்கும்.
 
இந்த திட்டத்தால் சீனாவில் திருமணம் ஆகாமல் உள்ள பல பெண்களுக்கு திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இனி சீனாவில் பல இளம்பெண்கள் டேட்டிங் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் அரசின் இந்த திட்டத்தால் பெரிய பலன் கிடைக்காது என்று ஒருசிலர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.