1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (06:34 IST)

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு தடை: என்ன காரணம்?

ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு தடை: என்ன காரணம்?
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. தடுப்பூசி தொடர்பான கூடுதல் தகவல்களை ரஷ்யா தராததால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது 
 
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்த மருந்தை ரஷ்யாவில் உள்ள கமலேயா தொற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியாவில் ஹைதராபாத்தில் டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் இந்த தடுப்பூசியை 1300 பேர்களிடம் செலுத்தி சோதனை செய்தது. இந்த மருந்து தொடர்பான தகவல் தருமாறு இந்திய மருந்து தர கட்டுப்பாடு நிறுவனம் கேட்டுக் கொண்ட நிலையில் அந்த தகவல்களை ரஷ்ய நிறுவனம் அளிக்காததால் இந்த மருந்தை பயன்படுத்துவது பாதுகாப்புக்கு உகந்தது அல்ல என்றும் அந்த மருந்தை அவசரகால பயன்படுத்தி பயன்பாட்டுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்க மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது