வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 ஆகஸ்ட் 2019 (20:29 IST)

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் ஒப்புதல்!

பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க இரண்டாம் எலிசபெத் ராணியிடம் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒப்புதல் கேட்டு இருந்த நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத்தின் ஒப்புதல் அளித்து உள்ளார்
 
 
இதுகுறித்து இரண்டாம் எலிசபெத் ராணி வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில் 'செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 12 வரையிலும் மற்றும் அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்படுவது அறிவித்துள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றம் திடீரென முடக்கப்பட்டு இருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 
இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.