வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 ஏப்ரல் 2023 (15:19 IST)

டெலிகிராம் செயலிக்கு தடை: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

telegrame
டெலிகிராம் செயலிக்கு பிரேசில் நாட்டின் நீதிமன்றம் தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டு உள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெலிகிராம் தளத்தில் செயல்படும் நவ நாஜிகள் குறித்த தரவுகளை டெலிகிராமின் தாய் நிறுவனம் தர மறுத்ததால் டெலிகிராம் செயலியை நாடு முழுவதும் இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் டெலிகிராம் செயலிக்கு தினமும் ஒரு கோடியே 61 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளில் நவ நாஜிக்கல் குழு ஈடுபட்டு வருவதாக  குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரேசில் நாட்டின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
 
Edited by Siva