வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2021 (14:47 IST)

வணக்கம்: தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து கூறிய போரிஸ் ஜான்சன்

தமிழர்களின் முக்கிய திருநாளான பொங்கல் திருநாளை இன்று தமிழக மக்கள் மிகவும் சிறப்புடன் கொண்டாடி வருகின்றனர் 
 
தமிழக மக்களுக்கு அரசியல்வாதிகள் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுன்றி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்களும் தமிழ் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
 
தமிழகம் இந்தியாவில் மட்டுமின்றி உலக தலைவர்களும் தமிழக மக்களின் பொங்கல் திருநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சற்று முன்னர் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் பொங்கல் திருநாளை கொண்டாடும் தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழர்களுக்கு வாழ்த்து கூறிய போரீஸ் ஜான்சனுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் தமிழர்கள் சார்பில் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது