ஒமிக்ரான் வைரஸ்… பூஸ்டர் டோஸ் 88 சதவீதம் பாதுகாப்பு- நம்பிக்கை அளிக்கும் தகவல்!
ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு உலக நாடுகள் அனுமதி வழங்கி உள்ளன.
கொரோனா இரண்டாம் அலைக்கு பின்னர் உலக அளவில் பாதிப்பு குறைந்து வந்தது. ஆனால் இப்போது உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரானால் பாதிப்பு மேலும் அதிகமாகி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பூஸ்டர் டோஸ் ஊசியால் ஒமிக்ரான் வைரஸுக்கு எதிராக 88 சதவீதம் பாதுகாப்பு அளிக்க முடியும் என சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் பூஸ்டர் டோஸ் ஊசி போட்டதும் அது உடனடியாக எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்றும் சொல்லப்படுகிறது.