உத்தரபிரதேச மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து...3 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலத்தில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இங்குள்ள பல்லியா நகரில் உள்ள மால்தேபூர் கங்கா காட் என்ற பகுதியில் காலையில் நடைபெற்ற சடங்கில் பங்கேற்பதற்காக ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
அப்போது, இந்தச் சடங்கில் கலந்து கொள்வதற்காக 35 பேர் படகில் ஆற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்தனர். படகு என்ஜின் கோளாறு காரணமாக ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் 3 பெண்கள் நீரில் மூழ்கி பலியாகினர். 3 பேர் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் படகு டிரைவர் தற்போது தலைமறைவாகி உள்ளதாக மாவட்ட நீதிபதி கூறியுள்ளார்.