Daily Horoscope
✕

உலகத்தை எச்சரித்த பில்கேட்ஸுக்கே கொரோனா ! - அதிர்ச்சி தகவல்

Written By Prasanth Karthick
Updated: புதன், 11 மே 2022 (08:31 IST)

உலகம் முழுவதும் கொரோனா பரவியுள்ள நிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு நீடித்து வரும் நிலையில் பல கோடி மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் கொரோனாவுக்கு எதிராக பல்வேறு தடுப்பு ஊசிகளை செலுத்தி வந்தாலும் மீண்டும் புதிய வேரியண்டுகள் உருவாகி வருகின்றன.

 

இந்நிலையில் கொரோனா வருவதற்கு முன்னரே பெருந்தொற்று குறித்து உலக நாடுகளை எச்சரித்தவர் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸ். தற்போது அவருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனக்கு கொரோனாவின் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளதாகவும், அதனால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

 

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசியும் பில்கேட்ஸ் செலுத்திக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

டாஸ்மாக் கடைகளில் ஃபாரின் சரக்குகள் - மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

விலைவாசி உயர்வு.. தவெகவை குறை சொல்ல முடியாது.. குஷ்பு பேட்டி...

சென்னை புறநகரில் போலீசார் அதிரடி சோதனை - 70 கிலோ கஞ்சா பறிமுதல்...

ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் 30 பவுன் தங்க நகை கொள்ளை!..

தேர்தல் தோல்வி எதிரொலி!.. ஈரான் விஷயத்தில் டிரம்ப் எடுத்த முக்கிய முடிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments