புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 டிசம்பர் 2017 (18:22 IST)

உடலுக்கு வெளியில் இருந்த இதயம்: உயிர் பிழைத்த குழந்தை!!

இங்கிலாந்தில் உடலுக்கு வெளியில் இதயத்துடன் இருந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இங்கிலாந்தை சேர்ந்தவர் டீன் விலின்ஸ். இவரது மனைவி நயோமி பிண்ட்லே. நயோமி கர்ப்பமாக இருந்த போது, அவரின் ஒன்பது வார கர்ப்பத்தின் மருத்து ஸ்கேனில் வயிற்றில் இருந்த குழந்தையின் இதயம் வெளிப்பகுதியில் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. 
 
இது போன்ற நிலையில் பிரித்தானியாவில் பிறந்த குழந்தை எதுவும் உயிர் பிழைக்காத நிலையில் நயோமிக்கு லியிசெஸ்டர் நகரில் உள்ள கிளின்பீல்ட் மருத்துவமனை பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். 
 
சிசேரின் மூலம் மருத்துவர்கள் நீண்ட போராட்டத்திற்கு பிறகு குழந்தையை உயிர் பிழைக்க வைத்துள்ளனர். இவர்களுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வன்னிலோப் என பெயரிடப்பட்டுள்ளது.  
 
தற்போது ஆப்ரேஷனுக்கு பிறகு குழந்தையின் இதயம் மார்பின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. பிறக்கும் ஒரு மில்லியன் குழந்தைகளில் 5 முதல் 8 குழந்தைகள் வரை இதயம் வெளியில் இருக்கும் பிரச்சனை கொண்டு பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.