1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (07:47 IST)

மாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சி: அதிபர், பிரதமர் கைதானதாக தகவல்

மாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சி
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது என்றும், அந்நாட்டின் அதிபர் இப்ராகிம் மற்றும் பிரதமர் சீஸே ஆகிய இருவரையும் துப்பாக்கி முனையில் ராணுவ வீரர்கள் கைது செய்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மாலியில் பயங்கரவாதத்தை தடுக்க தவறியதாகவும், தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அதிபர், பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான மாலியில் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த சில மாதங்களாக கிளர்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் மக்களின் தொடர் போராட்டத்தின் உச்சகட்டமாக திடீரென ராணுவத்தினரும் கிளர்ச்சியில் இணைந்ததாக தெரிகிறது.
 
இதனையடுத்து மாலி தலைநகர் பமாகோ என்ற நகரில் டாங்கிகள், ஆயுதங்களுடன் ராணுவத்தினர் வலம் வந்ததால் அந்நாட்டில் ராணுவ புரட்சி வெடித்ததாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளுடன் பிரதமர் பவ்பவ் சிஸ்சே பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இந்த பேச்சுவார்த்தை முடிவு ஏற்படவில்லை என்றும் பேச்சுவார்த்தைக்கு பின் அதிபர் இப்ராகிம் பவுபக்கர் கெய்டா, பிரதமர் பவ்பவ் சிஸ்சே ஆகியோர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
கைது செய்யப்பட்டுள்ள அதிபர், பிரதமரை உடனே ராணுவத்தினர் விடுதலை செய்ய வேண்டும் என்று ஐநா சபை வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது