சிஏஏவுக்கு எதிரான தீர்மானத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை: ஐரோப்பிய யூனியன் அறிவிப்பு
மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் 6 கட்சிகள் இணைந்து தீர்மானமொன்றை இயற்றியதாக செய்திகள் வெளிவந்தது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா கடுமையான கண்டனத்தை தெரிவித்தது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் ஐரோப்பிய ஒன்றியம் தலையிடக்கூடாது என்றும் கண்டித்தது
இந்த நிலையில் 6 அரசியல் அமைப்புகள் கொண்டு வந்த இந்த தீர்மானத்திற்கும் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் உள்ள சில அரசியல் குழுக்கள் சேர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருப்பதாகவும், உண்மையில் இது 28 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரபூர்வ முடிவு அல்ல என்று விளக்கம் அளித்துள்ளது