புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (09:04 IST)

யாருடைய குடியுரிமையையும் இது பறிக்காது: சிஏஏ குறித்து ஜக்கி வாசுதேவ்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வரும் இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றும் இதனால் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
சமீபட்தில் டாவோசில் நகர் சென்ற ஜக்கி வாசுதேவ் அங்குள்ள ஊடகம் ஒன்ருக்கு பேட்டியளித்தார். அப்போது சிஏஏ குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், சிஏஏ என்பது பிரிவினைக்குப் பின்னர் விடுபட்ட சிறுபான்மையினர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் என்றும், இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என்றும் கூறினார்.
 
மேலும் மாணவர்கள் உள்ளூர் பிரச்சினைகளுக்காகத்தான் போராட்டம் நடத்துவதாகவும், குடியுரிமை சட்டத்தை தேசியப் பிரச்சினையாக்க கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவிற்குள் புதியவர்களை கொண்டு வருவதற்கான சட்டம் அல்ல இது என்று கூறிய ஜக்கி வாசுதேவ், எல்லோரையும் அனுமதிக்குமளவுக்கு இந்தியாவில் மக்கள் தொகை குறைவாகவா உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்