வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (10:46 IST)

துபாயில் இருந்து வந்த மற்றொருவருக்கு குரங்கம்மை? – கேரளாவில் அதிர்ச்சி!

Monkeypox
உலகை உலுக்கி வரும் குரங்கம்மை நோயால் கேரளாவை சேர்ந்த நபர் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பரவ தொடங்கிய குரங்கம்மை என்ற புதிய நோய் தற்போது ஐரோப்பிய, வளைகுடா நாடுகளிலும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அரபு அமீரகத்திலிருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இந்தியாவில் பதிவான முதல் குரங்கம்மை பாதிப்பு இதுவாகும்.

அதை தொடர்ந்து கடந்த 2 நாட்கள் முன்னதாக துபாயிலிருந்து வந்த மற்றொருவருக்கும் குரங்கம்மை அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பூனா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஆய்வு முடிவுகளுக்கு பிறகே அவருக்கு குரங்கம்மையா என்பது தெரிய வரும். எனினும் கேரளாவில் இருவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் தெரிய வந்துள்ளது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.