திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 15 ஜூலை 2022 (15:55 IST)

பிருத்விராஜின் திரைப்படத்தில் மாற்றுத் திறனாளிகளை இழிவுபடுத்தும் வசனம்… மன்னிப்பு கேட்ட படக்குழு!

மலையாள நடிகர் ப்ரித்விராஜ் நடித்து ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் கடுவா. கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக போராடிய கடுவாகுன்னெல் குருவச்சன் என்பவரின் உண்மைக் கதையை தழுவி இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆனால் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை இழிவுப்படுத்தும் விதமாக கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தற்போது படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்து இயக்குனர் ஷாஜி கைலாஷ் வருத்தம் தெரிவித்துள்ளார்.