திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2019 (18:04 IST)

என் பாம்பை கண்டுபிடிச்சு குடுங்க ப்ளீஸ்! – யூட்யூபில் உதவிக் கேட்ட முதியவர்!

கலிஃபோர்னியாவில் தான் பாம்புகள் வைத்திருந்த பையை சிலர் திருடி சென்றுவிட்டதாக முதியவர் ஒருவர் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் ப்ரையன் கண்டி. உயிரினங்களின் மீதான ஆர்வத்தால் பல வகையான பாம்புகள் மற்றும் உடும்புகள் போன்றவற்றை வளர்த்து வருகிறார். அவற்றை உயிரினங்கள் குறித்த கண்காட்சிகளுக்கு எடுத்து சென்று மக்களுக்கு காட்சிப்படுத்துவது அவரது வழக்கம்.

கடந்த சனிக்கிழமை மார்ட்டின் லூதர் கிங் நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது பாம்புகளை வைத்து கண்காட்சி ஒன்றை நடத்தினார் ப்ரையன். நிகழ்ச்சி முடிந்து பைகளில் பாம்புகளை வைத்துவிட்டு காரை எடுக்க சென்றிருக்கிறார். திரும்ப வந்தபோது அதில் சில பைகள் காணாமல் போயிருக்கின்றன. அதில் சில மலைப்பாம்புகள் இருப்பதாக ப்ரையன் கூறியுள்ளார்.

அதில் பாம்புகள் இருப்பது தெரியாமல் யாராவது அதை திருடி போயிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் வீடியோ வெளியிட்ட ப்ரையன் தனது பாம்புகளை கண்டுபிடிக்க தனக்கு உதவுமாறும், ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்லுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.