35 ஆண்டுகள், 93 கொலைகள்.. அலறவைத்த கொலைகாரன்

Arun Prasath| Last Modified வியாழன், 10 அக்டோபர் 2019 (14:34 IST)
35 ஆண்டுகளில் 93 பெண்களை கொலை செய்ததாக ஒரு கொடூர கொலைகாரன் ஒப்புக்கொண்டுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த முன்னாள் குத்துச் சண்டை வீரரான சாமுவேல் லிட்டில், கடந்த 2012 ஆம் ஆண்டு போதை பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரித்த போது, மரபணு சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் 1987 ஆம் ஆண்டிலிருந்து 1989 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 3 பெண்களை அவர் கொலை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

மேலும் சில சந்தேக கொலைகள் குறித்து விசாரணை நடத்தியதில், 1970 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரையில் 93 கொலைகளை தாம் செய்துள்ளதாக சாமுவேல் ஒப்புக்கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் கொலை செய்த பெண்களில் கறுப்பின பெண்களும், பாலியல் தொழில் மற்றும் போதைக்கு அடிமையான பெண்களுமே அதிகம் என கூறப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :