செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 மார்ச் 2020 (18:56 IST)

கொரோனாவால் துப்பாக்கியை தேடி ஓடும் பொதுமக்கள்: அதிர்ச்சி தகவல்

கொரோனாவால் துப்பாக்கியை தேடி ஓடும் பொதுமக்கள்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் இந்த வைரஸ் எதிரொலியாக துப்பாக்கி வாங்க கடைகளில் பொதுமக்கள் குவிந்து வருவதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொரோனா தாக்கம் காரணமாக கடைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகிறது. எனவே அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கும் முயற்சியில் பொதுமக்கள் உள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் அத்தியாவசிய பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று புதிதாக கிளம்பி இருப்பதாகவும் அந்த கும்பலிடமிருந்து பொருட்களையும் உயிர்களையும் காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கிகளை வாங்க பொதுமக்கள் தீவிரமாக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
அமெரிக்க மக்கள் கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமான துப்பாக்கி வாங்க துப்பாக்கி கடை முன் வரிசையில் நிற்கின்றார்கள். கடந்த சில நாட்களில் மட்டும் அதிக அளவிலான துப்பாக்கிகளும் தோட்டாக்களும் விற்பனையாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது
 
கொரோனாவில் இருந்து தப்பிப்பது ஒருபக்கம் சவாலான காரியம் என்றால் கொரோனாவுக்கு பயந்து வாங்கி வைத்த அத்தியாவசியமான பொருட்களை பாதுகாப்பது இன்னொருபக்கம் சவாலான காரியமாக இருப்பதாக அமெரிக்க மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்