ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : திங்கள், 16 மார்ச் 2020 (18:37 IST)

கொரோனா வைரஸால் தள்ளிப்போன காடன் படம்...!

தொடரி படத்தின் இயக்குனர் பிரபு சாலமன் அடுத்ததாக நடிகர் ராணா டக்குபதியை வைத்து காடன் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் விஷ்ணு விஷால், புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

சாந்தனு மொய்த்ரா இசையமைத்துள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இந்தியா மற்றும் தாய்லாந்து காடுகளில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான உருவாகியிருக்கும் இப்படம் ஒரு யானை பாகனின் வாழ்வை மையமாக கொண்டு உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான கவனத்தை ஈர்த்தது.

இந்த படம் வருகிற ஏப்ரல் 2-ம் தேதி 3 மொழிகளில் வெளியாகவிருந்தது. ஆனால் தற்போது கொரோன வைரஸ் பரவி வருவதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படும் என்று  பேசப்படுகிறது. மேலும், ரசிகர்களின் பாதுகாப்பு காரணமாக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியுடன் வருவதாக காடன் படக்குழுவினர் பதிவு செய்துள்ளனர்.