புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 டிசம்பர் 2018 (10:07 IST)

குற்றவாளியை பேஸ்புக்கில் தேடியப் போலிஸ் – அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகானத்தில் உள்ள ரிச்லாண்ட் பகுதி போலீஸார் தங்களது ஃபேஸ்புக் பக்கத்தில், ஆண்டனி அக்கேர்ஸ் என்ற தேடப்படும் குற்றாவாளியைப் பற்றி தகவல் தெரிந்தால் எங்களை 09-628-0333 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று அவரது புகைப்படத்துடன் அறிவித்து இருந்தனர்.

இந்தப் பதிவின் கீழ் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஒரு கமண்ட் வந்து விழுந்தது. போலிஸார் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த ஆண்டனி அக்கேர்ஸ் தானாக முன்வந்து அந்த பதிவில் ‘ கொஞ்சம் பொறுமையாக இருங்கள் நானே இன்னும் இரு தினங்களில் வந்து சரணடைகிறேன்.’ என அறிவித்தார்.

இதற்குப் பதிலளித்த போலிஸார் ‘ கீழே உள்ள எண்ணைட்ன் தொடர்புகொள்ளுங்கள். நாங்களே வந்து உங்களை அழைத்து செல்கிறோம்.’ என அறிவித்தார்கள். ஆனால் ஆண்டனி இரு தினங்களில் தானே சரணடைவதாக சொல்லிவிட்டு மறைந்தார்.

இதன் பின் இரு தினங்கள் கழித்து நெட்டிசன் ஒருவர் போலிஸாரிடம் ஆண்டனி சரணடைந்து விட்டாரா எனக் கேட்டத்ற்குப் போலிஸார் இன்னும் இல்லை எனப் பதிலளித்தனர். அந்த உரையாடலின் இடையில் மீண்டும் உள்ளே வந்த ஆண்டனி ‘எனக்கு இங்கு வேலை காரணமாக சில பிரச்சினைகளில் சிக்கியுள்ளேன்.  வர இயலாததிற்கு நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.  நாளை மதிய உணவுக்கு முன்னர் நான் வந்துவிடுவேன். நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். இருப்பினும் நான் உறுதி அளிக்கிறேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு தருவதற்கு நான் முன் கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன்.’ எனக் கூறிச் சென்றார்.

ஆனால் விடாத போலிஸ் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் நாங்களே உங்களை அழைத்து வருவோம் எனக் கூறியதற்குப் பதிலேதும் சொல்லாமல் மறைந்தார். இதை முன்னிட்டு அடுத்த நாள் மதியம் போலிஸ் அலுவலகத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள லிஃப்டிற்கு அருகே நின்று அவர் வந்து விட்டதை உறுதி செய்யும் விதமாக செல்ஃபி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

போலிஸாருக்கும் குற்றவாளிக்கும் இடையே நடந்த உரையாடல் அமெரிக்க மக்கள் மத்தியில் வைரலாகப் பரவி வருகிறது.