நண்பர்களே நண்பனை கடத்தி கொலை : குற்றவாளிகளை மடக்கிப் பிடித்த போலீஸ்

JAIL
Last Modified சனி, 24 நவம்பர் 2018 (15:21 IST)
சண்டிகர் மாநிலத்தில் உள்ள பஞ்சாபில் தன் நண்பர்களாலேயே ஒரு சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு  பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளிக்குச் சென்ற சிறுவன் மாலையில் திரும்ப வீட்டுக்கு வராததால்  பெற்றோர் பதறியடித்து அக்கம் பக்கம் வீடுகளில் தேடிக்கொண்டு அலைமோதினர். அப்போது சிறுவனின் பெற்றோர்க்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் உங்கள் மகன் வேண்டுமென்றால் உடனடியாக 3கோடி கொடுக்க வேண்டும் என மிரட்டி இருக்கிறார்கள்.
 
முதலில் மூன்று லட்சம் தருவதாக ஒப்புக்கொண்ட பெற்றோர். உடனே இவ்விஷயத்தை போலீஸரிடம் தெரிவிக்க... போலிஸார்  குற்றவாளிகளை பெற்றோருக்கு வந்த தொலைபேசி அழைப்பினை வைத்துக்கொண்டு தேட ஆரம்பித்தனர்.
 
பின் அவர்கள் பதுங்கி இருந்த இடத்தை கண்டு பிடித்தனர். ஆனால்  கடத்திய நண்பர்கள் சிறுவனை கொன்று விட்டதாக கூறியுள்ளனர்.

 
ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுவனை அவனது நண்பர்கள் பணத்துக்காக கடத்தி கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :