புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 மே 2018 (16:35 IST)

காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணி நிறுத்தம்!

கடந்த 2014 ஆம் ஆண்டு மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு பறந்த, போயிங் 777 வகை விமானம் காணாமல் போனது. இதில் 239 பயணிகள் பயணித்தனர். 
 
இதனை தொடர்ந்து சர்வதேச அளவில் கடற்படைகளும், விமான படைகளும் அந்த விமானத்தை கண்டுபிடிக்கும் பணியில் கடந்த சில வருடங்களாக தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். ஆனால், அதற்கு எந்த பலனும் இல்லை. 
 
விமானம் கடலில் விழுந்து மூழ்கியதா, நிலத்தில் விழுந்ததா, மலைப் பகுதியில் நொறுங்கியதா என்ற உறுதியான தகவல்  தெரியவில்லை. விமானத்தின் கருப்பு பெட்டியும் பயனளிக்கவில்லை.
 
2016 ஆம் ஆண்டு விமானம் இந்திய பெருங்கடலுள் விழுந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. எனினும் விமானத்தைக் கண்டறிய முடியவில்லை. விமானத்தைக் கண்டுபிடிப்பது சிரமமானது என்று ஆஸ்திரேலிய, மலேசிய, சீன அதிகாரிகள் அறிக்கை வெளியிட்டனர். 
 
தற்போது, காணாமல் போன மலேசிய விமானமான எம்.எச் 370 ஐ தேடும் பணியை அமெரிக்காவை சேர்ந்த ஓசியன் இன்ஃபினிட்டி  என்ற தனியார் நிறுவனம் முறைப்படி நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.