வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 27 மே 2018 (14:16 IST)

விமானத்தில் பீர் தர மறுத்ததால் உடலை அறுத்துக்கொண்ட பயணி

அமெரிக்காவில் உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் பீர் கிடைக்காததால் ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழித்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவில் உள்நாட்டு பயணிகள் விமானம் செயிண்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி குடிக்க பீர் கேட்டுள்ளார். அந்த பீர்-ஐ குடித்துவிட்டு மீண்டும் ஒரு பீர் கேட்டுள்ளார்.
 
ஆனால் பணிப்பபெண் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜேசன் விமானத்தில் தகராறு செய்துள்ளார். அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர். ஒரு கட்டத்தில் ஜேசன் தனது உடலை பிளேடால் கிழித்து கொண்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
பின்னர் விமானம் தரையிறங்கியதும் போலீஸார் அவரை கைது செய்தனர்.