செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 16 மார்ச் 2022 (11:05 IST)

ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைபாடுடன் இந்தியா - அமெரிக்கா சொல்வது என்ன?

இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள்  கட்டுப்படுத்தாது என அமெரிக்க விளக்கம். 

 
இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இது குறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாகவும் கச்சா எண்ணெய்யை சரக்கு கப்பல்கள் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் பொறுப்பையும் அதற்கான காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 100 டாலருக்கும் குறைவாக இருக்கும் நிலையில் ரஷ்யாவிலிருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வரவிருப்பதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்றும் மாறாக குறைய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் கட்டுப்படுத்தாது என அமெரிக்க விளக்கமளித்துள்ளது. எனினும் அமெரிக்க எம்.பி. அமிதர ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ரஷ்யாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை இந்தியா எடுத்துள்ளது என்று கருத தோன்றும் என தெரிவித்துள்ளார்.