ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் குற்றவாளி! – தீர்மானம் நிறைவேற்றிய அமெரிக்கா!
உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்ய அதிபர் புதினை போர் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 20 நாட்களை தாண்டியுள்ள நிலையில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. முக்கியமாக தலைநகர் கீவ்வில் உள்ள குடியிருப்புகள், கட்டிடங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளை ரஷ்யா தாக்கி வரும் நிலையில் கிவ்வில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடர்ந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை போர் குற்றவாளியாக அறிவித்து அமெரிக்க செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால் அமெரிக்காவின் அழுத்த ரஷ்யா மீது அதிகரிப்பதாக தெரிகிறது. ஐரோப்பிய நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்பதால் ரஷ்யா தொடர்ந்து போர் புரியுமா அல்லது பின் வாங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.