செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (13:54 IST)

ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்

Amazon Alexa
அமேசான் நிறுவனத்தில் மேலும் சில ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

உலகின் முன்னணி நிறுவனங்களான எலான் மஸ்கின் டுவிட்டர், பில்கேட்ஸின் மைக்ரோசாப்ட், சுந்தர் பிச்சை சி.இ.ஓவாக உள்ள கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து சமீபகாலமாக ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்தாண்டு முதல் ஐடி நிறுவனங்கள் மற்றும் உலகின்  முன்னணி நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், அமேசானில் இருந்து  சில மாதங்களுக்கு முன்பு  பல   ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தம் உள்ளிட்டவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அலெக்ஸா குரல்( Alexa Voice) சேவை பிரிவில் பணிபுரியும் ஊழியர்களின்  எண்ணிக்கையை கணிசமாக குறைக்க அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவால் அமெரிக்கா மற்றும் கனடாவின் உள்ள பல நூறு பேர் வேலையிழப்பார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.