வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 11 ஆகஸ்ட் 2023 (14:55 IST)

அறிவிப்பு இன்றி திடீரென ஓடிடியில் வெளியான ‘ஆதிபுருஷ்’.. எந்த ஓடிடியில்?

adipurush
எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, விளம்பரம் இன்றி திடீரென பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.  
 
பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் என்ற திரைப்படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கடுமையாக கேலி, கிண்டல் செய்யப்பட்டது என்பதும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் இந்த படம் இன்று ஓடிடியில் திடீரென எந்தவிதமான விளம்பரமும் இன்றி வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்திலும் இந்தி மட்டும் நெட்பிளிக்ஸ் தளத்திலும்  ஒளிபரப்பாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran