இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! – மக்கள் பீதி!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே பீதியை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் இருந்து 33 கி.மீ மேற்கில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் துறை தெரிவித்துள்ளது. அதிகாலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.
நேற்று இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.