இந்தோனேஷியாவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்! மீண்டும் சுனாமி? – அதிர்ச்சியில் மக்கள்!
இந்தோனேஷியா கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
இந்தோனேஷிய கடல் மற்றும் தீவு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அவை ரிக்டர் அளவில் குறைந்தவையாகவே இருந்து வந்தன. இந்நிலையில் தற்போது இந்தோனேஷியாவின் மௌமர் என்ற இடத்திலிருந்து 95 கி.மீ வடக்கே கடல்பகுதியில் 7.4 ரிக்டர் அளவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து பசிபிக் கடல் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. 7.4 அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.