புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : திங்கள், 6 ஜனவரி 2020 (17:01 IST)

இனி வாட்ஸ் ஆப்லயும் வரப்போகுதுப்பா விளம்பரம்..

இந்த ஆண்டுக்குள் வாட்ஸ் ஆப்பிலும் விளம்பரம் வரலாம் என பல செய்திகள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் ஆப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியத்லிருந்து பல புது புது அப்டேட்டுகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் நாம் பார்க்கும் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களுக்கு இடையே இனி விளம்பரங்கள் தோன்றும் என கடந்த ஆண்டு நெதர்லாந்தில் நடந்து முடிந்த சந்தைப்படுத்துதல் உச்சி மாநாட்டில் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் ஏதும் பகிரப்படாது எனவும் கூறப்பட்டுள்ளதாம். இந்த அப்டேட் இந்த ஆண்டுக்குள் வரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.