திங்கள், 3 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 13 டிசம்பர் 2024 (17:32 IST)

சீன வீரர் வேண்டுமென்றே தவறு செய்தாரா? குகேஷ் வெற்றி குறித்து கேள்வி எழுப்பும் செஸ் கூட்டமைப்பு..!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சமீபத்தில் நடந்த நிலையில் இந்த போட்டியில் இந்தியாவின் குகேஷ் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில், அவரிடம் தோல்வி அடைந்த சீன வீரர் டிங் லிரென் வேண்டுமென்றே தவறு செய்ததாக ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலக சாம்பியன்ஷிப் கடைசி சுற்று ஆட்டத்தில் சீன வீரர் டிங் லிரென் 55வது நகர்வில் தவறு செய்தார். அது குபேஷுக்கு சாதகமாக அமைந்தது. இது குறித்து சர்வதேச கூட்டமைப்பு முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என ரஷ்ய செஸ் கூட்டமைப்பின் தலைவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

சீன வீரரின் நகர்வு சந்தேகத்தை தருகிறது என்றும், அது அவரது தரத்திற்கான வீரருக்கு மிகவும் வேடிக்கையானது என்றும், அதை அவர் வேண்டுமென்றே செய்தது போல் உள்ளது என்றும் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.