திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 23 டிசம்பர் 2019 (20:54 IST)

வயிற்று வலிக்காக... அதிக ஊசிகள் போடப்பட்ட சிறுமி உயிரிழப்பு ...

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவர்கள் அலட்சியத்தால் சிறுமி   இறந்துவிட்டதாக  அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைதராத்தில் உள்ள ஏ.எஸ் ரவ் என்ற நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 10 வயதுடைய ரம்யா ஸ்ரீ என்பவர் கடும் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
 
அப்போது,அவருக்கு சிகிச்சை அளித்தபோது அவர் உயிர் இழந்துவிட்டார். சிறுமி திடீரென உயிர் இழப்பதற்கு மருத்துவர்கள் அதிக அளவில் ஊசி போட்டதே காரணம் என குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மருத்துவமனை முன் நின்று போராடினர்.
 
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.