வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (16:12 IST)

லைவ் வீடியோவில் கசமுசா: பெண்ணின் செயலால் அதிர்ந்துபோன நபர்

அமெரிக்காவில் பெண் ஒருவர் இளைஞரின் வீட்டிற்குள் நுழைந்து திடீரென லைவ் வீடியோவில் தனது ஆடைகளை கலைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் திடீரென வாலிபர் ஒருவரது வீட்டிற்குள் நுழைந்தார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த நபர், பெண்ணிடம் நீங்கள் யார் என வினாவியுள்ளார். அதற்குள் அந்த பெண், வாலிபரின் போனை பிடுங்கி, அவரின் பேஸ்புக் லைவில் தனது ஆடைகளை களைத்து அரைகுறை உடையுடன் வீடியோ எடுத்தார். வீடு முழுவதும் அரைகுறை ஆடையுடனே சுற்றி லைவ் கொடுத்துக் கொண்டிருந்தார்.
 
அந்த பெண் யார் எதற்காக இப்படி செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியாமல் முழித்தார் வாலிபர். சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்தனர்.
 
அந்த பெண் ஒரு திருடியா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா? என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.