ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (22:36 IST)

பறந்துகொண்டிருந்த விமான என்ஜினில் தீ விபத்து.... நடந்தது என்ன?

plane
நேபாளம்  நாட்டின் காத்மண்டுவில் இருந்து வெளி நாடு புறப்பட்ட விமானம்  ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

நேபாளம் நாட்டில் தலைநகர் காத்மண்டுவில் இருந்து ஐக்கிய அமீரகத்தில் உள்ள துபாய் பகுதிக்குப் புறப்பட்டுச் சென்ற பிளை துபாய் விமானம் 576( போயிங் 737-800) விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விமானம் புறப்பட்டு வானில் பறந்த சில  நிமிடங்களில் அதன் எஞ்சினில் தீப்பிடித்தது. உடனடியாக விமானக்கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அறிவிக்கப்பட்டு, விமானத்தை அவசரகால அடிப்படையில் காத்மண்டு அல்லது தரையில் இறக்க முயற்சி செய்தனர்.

பின்னர் விமானத்தின் கோளாறு சரிசெய்த நிலையில், மீண்டும் விமமானம் துபாய்க்குப் புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.