1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 9 அக்டோபர் 2018 (11:57 IST)

20 பெண்களை கற்பழித்துவிட்டு நாய்க்கு இரையாக்கிய கொடூரன்

அமெரிக்காவில் 20 பெண்களை கற்பழித்த கொடூரன் அவர்களை கொலை செய்து நாய்க்கு இரையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்கள் மீதான பாலியல் தொல்லைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் பெண்கள் பலர் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படுகின்றனர்.
 
மெக்சிகோவில் ஈகாடெகப் பகுதியில் பல பெண்கள் திடீரென காணாமல் போகினர். இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில் போலீஸார் விசாரித்த போது ஜீவான் கார்லோஸ் என்பவன் மீது சந்தேகித்த அவர்கள், அவனிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர்.
 
அவனின் வாக்குமூலத்தை கேட்ட போலீஸார் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர். தான் இதுவரை 20 பெண்களை கற்ழித்திருப்பதாகவும், பெண்களை கற்பழித்துவிட்டு அவர்களை கொலை செய்து அவர்களின் உடல் பாகங்களை விற்றதாகவும், பின் அவர்களை நாய்க்கு இரை ஆக்கியதாகவும் அவன் கூறியுள்ளான்.
 
அவனின் வீட்டருகே ஏராளமான பெண்களின் எழும்புக்கூடுகளை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் இந்த கொடூர செயலுக்கு ஜீவானின் மனைவியும் துணை நின்றுள்ளார். போலீஸார் அவனையும் அவனது மனைவியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.